மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சிவகார்த்திகேயனால் தான் எனக்கு இந்த நிலைமை" மனம் வருந்திய பிரியங்கா மோகன்..
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார் பிரியங்கா மோகன்.
இவர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் டான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்திருக்கிறது.
இது போன்ற நிலையில் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனை குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, "சிவகார்த்திகேயனுக்கு இனிப்பு சாப்பிட மிகவும் பிடிக்கும்.
இவ்வாறு படப்பிடிப்பின் போது அதிகமாக இனிப்புகளை வாங்கி சாப்பிடுவார் . அவர் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கும் தருவார். இதனால் இனிப்பு சாப்பிடுவதற்கு மிகவும் அடிக்ட்டாகி விட்டேன். சிவகார்த்திகேயனால் தான் எனக்கு இந்த நிலைமை" என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.