மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மஞ்சகாட்டு மைனா எனை கொஞ்சி கொஞ்சி போனா" பிரியங்கா மோகனின் அசரவைக்கும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவர் முதன்முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தனது நடிப்பு திறமையின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்தப் படத்திற்கு பின்பு டான், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வரும் பிரியங்கா மோகன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில், அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வரும் பிரியங்கா மோகன் தற்போது மஞ்சள் நிற புடவையில் போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மஞ்சக்காட்டு மைனா என்று கமெண்ட் செய்து ரசித்து வருகின்றனர்.