மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. தேசிய திரைப்பட விருதுகளை தட்டி தூக்கிய பிரபலங்களுக்கு வழங்கபடும் பரிசு என்ன தெரியுமா??
2020 ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்கள் குறித்த பட்டியல் கடந்த வெள்ளியன்று வெளியிட்டது அதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று படம் ஐந்து விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படம் 2 விருதுகளை தட்டி தூக்கியது. இந்தியாவின் தொன்மையான, முதன்மையான விருதான இது குடியரசுத் தலைவரால் தலைநகர் டெல்லியில் வழங்கப்படுகிறது. தேசிய திரைப்பட விருதுகள் ஸ்வர்ண கமலம், ரஜத் கமலம்,ஜூரி விருதுகள் என 3 வகையாக பிரியும்.
இதில் ஸ்வர்ண கமலம் விருது தங்க முலாம் பூசிய பதக்கம். சிறந்த பீச்சர் படம், சிறந்த இயக்குனர் விருதை வென்றவர்களுக்கு ஸ்வர்ண கமலத்தோடு ரூ.2.5 லட்சம் மற்றும் சான்றிதழும், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கு ஸ்வர்ண கமலத்தோடு ரூ.2 லட்சம், சிறந்த குழந்தைகளுக்கான படத்திற்கு ஸ்வர்ண கமலத்தோடு ரூ.1.5 லட்சமும், சிறந்த புது இயக்குனர், சிறந்த அனிமேட்டட் படங்களுக்கு ஸ்வர்ண கமலத்தோடு 1 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
ரஜத் கமலம் என்பது வெள்ளியால் ஆன பதக்கம். சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தொழில்நுட்ப கலைஞர் ஆகியோருக்கு ரஜத் கமல பதக்கமும், காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
சிறப்பு ஜூரி பரிசு என்பது சிறந்த வேலையை குறிப்பிட்டு அவர்களை ஊக்கப்படுத்த வழங்கப்படுகிறது. இதற்கென ரொக்கப் பரிசு எதுவும் இல்லை. பாராட்டுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.