மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாய் பல்லவி என்றாலே தயாரிப்பாளர்களுக்கு ஒரே குஷி தான்.. கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுப்பு.?
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். இவரின் நடிப்பாலும், அழகாலும் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதன்பிறகு சாய் பல்லவிக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தது என் ஜி கே, மாரி 2, கார்கி, பாவ கதைகள் போன்ற திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் நடித்திருந்தார்.
இதுபோன்ற நிலையில் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்களில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுப்பதால் இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியடைகின்றன. இதனால் சாய்பல்லவி என்றாலே தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.