மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என்னுள் சொர்க்கம் உன்னால்" மனைவி மகாலட்சுமியை தாறுமாறாக புகழும் ரவீந்தர்.!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக ரவீந்திரன் சந்திரசேகர் விளங்கி வருகிறார். இவர் முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் நட்புனா என்னன்னு தெரியுமா? ஆகிய திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நடிகை மகாலட்சுமிக்கு முதலில் திருமணமாகி விவாகரத்தான நிலையில் அவருக்கு சச்சின் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தயாரிப்பாளர் ரவீந்தரனுக்கும் அவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களது திருமணத்தை பல்வேறு தரப்பினரும் ரவீந்திரனின் உருவத்தை வைத்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி ஜோடி தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஒருவருக்கொருவர் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் இவர் தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து " நீ அதிகம் சிரிக்கும் போது நான் என்னுள் சொர்க்கத்தை உணருவேன் எப்போதும் மகிழ்ச்சியாக இரு" என அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அவரது மனைவி "என் காதலே, இந்த உலகத்தில் என்னை பெருமைமிகு பெண்ணாக மாற்றிய உனக்கே நன்றி" என்று பதில் அளித்திருக்கிறார். இந்தக் காதல் ஜோடி சமூகக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்காமல் ஒருவருக்கொருவர் சமூக வலைதளங்களில் தங்களது அன்பை எப்போதும் பரிமாறி வருகின்றனர்.