மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல அஜித் பிறந்தநாளில், குட் பேட் அக்லீ படத்தின் தயாரிப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து.!
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகராக இருக்கும் தல அஜித் குமார், எந்த விதமான பின்புலமும் இன்றி உழைப்பால் உயர்ந்த திரை பிரபலங்களில் ஒருவராக ரஜினிக்கு பின் கவனிக்கப்படுகிறார்.
மே 1ம் தேதி நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் என்பதால், இன்று அவரின் ரசிகர்கள் பலரும் நலத்திட்டங்களை செயல்படுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.
தற்போது நடிகர் அஜித் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து குட் பேட் அக்லீ (Good Bad Ugly) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், படத்தின் இன்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு குட் பெட் அக்லீ படத்தின் தயாரிப்பாளர்கள் ரவிசங்கர், நவீன் ஏர்னெனி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.