மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலில் ஜெயில்.. இப்போ சிங்கப்பூரா?? செம மாஸாக, கெத்தாக தயாரான புகழ்! இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துக் கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள், டைமிங் காமெடிகள் ரசிர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் புகழின் உச்சிக்கே சென்ற அவருக்கு சினிமாவில் படவாய்ப்புகளும் குவிந்தது.
அதனை தொடர்ந்து புகழ் சந்தானத்தின் சபாபதி, அஜித்துடன் வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், ஆர்.ஜே. பாலாஜியுடன் வீட்ல விசேஷம் என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஜூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார்.
Singapore ✈️ pic.twitter.com/LR1agbiA4y
— Pugazh (@pugazh_iam) June 30, 2022
இந்நிலையில் அண்மையில் புகழ் ஜெயிலில் இருந்து வெளியே வருவதை போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. பின் அது படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்டது என தெரியவந்தது. இந்த நிலையில் புகழ் தற்போது அதே படத்தின் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளார். அதற்காக செம மாஸாக தயாராகி சென்னை விமான நிலையத்தில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.