திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜியின் ஆசை இதுதானா! நான் நிறைவேற்றுவேன் மாமா... உருகிய குக் வித் கோமாளி புகழ்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகர் வடிவேலு பாலாஜி. இவர் நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அனைத்து கெட்டப்பிலும் வந்து அசால்டாக கலக்கி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இந்த நிலையில் 45 வயது நிறைந்த அவர் செப்டம்பர் 10-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மேலும் தற்போது வரை அவரது காமெடிகளும், நினைவுகளும் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை.
இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் பிறந்தநாள். அதை முன்னிட்டு அவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து குக் வித் கோமாளி புகழ் பிறந்தநாள் வாழ்த்து கூறி, மாமா எப்பவும் நீ என் கூடதான் இருப்ப, மக்களை எப்பவும் சந்தோசமா வைக்கணும்னு நீ ஆசைப்பட்டதை நான் நிறைவேற்றுவேன் மாமா. மிஸ் யூ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.