மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்!
காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது கோவை நீதிமன்றம்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரிதா நாயர். இவரும் இவரது கணவரும் சேர்ந்து ஒரு நிறுவனம் ஒன்றின் மூலம் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் இந்த நிறுவனம் மூலம் காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த தொழிலதிபர்கள் சிலரிடம் பல லட்சம் பணம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் அவர்களின் நிறுவன மேலாளர் ரவி ஆகியோர் மீது கோவை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை 6ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை முடிவில் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில், சரிதா நாயர் மற்றும் மேலாளர் ரவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.