#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆக்ஷன் கிங் அர்ஜுன் கையில் குழந்தையாக இருக்கும் பிரபல நடிகர்.! யார் தெரியுமா.?
90-களில் தமிழ்திரைப்படங்களில் அறிமுகமாகி முன்னணி நடிகராக இருந்தவர் அர்ஜுன். இவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரும்பாலும் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஆக்க்ஷன் படங்களாகவே இருந்தன. அதனாலேயே இவருக்கு 'ஆக்க்ஷன் கிங்' என்ற பெயர் வந்தது.
தற்போதும் கூட இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டு தான் உள்ளார் விஜயின் லியோ படத்திலும் இவர் நடித்திருப்பது ரசிகர்ளுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், முன்னணி காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியை, அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அர்ஜுன் தன் கையில் ஒரு சிறுவனை வைத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது யார் என்று ரசிகர்கள் யோசித்து வரும் நிலையில், அந்த சிறுவன் கன்னட முன்னணி நடிகராக இருந்து சமீபத்தில் மறைத்த நடிகர் புனீத் ராஜ்குமார் தான் அது என்று கூறப்பட்டு வருகிறது.