மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாட்டுப்புற பாடகர் ரஞ்சித் சித்து இரயில் தண்டவாளத்தில் தற்கொலை; உறவினர்களின் தொல்லையால் உயிரை மாய்த்த சோகம்.!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகர் ரஞ்சித் சித்து. இவர் அங்குள்ள சாங்கிருர் மாவட்டத்தின் சுகம் நகரில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில், அவர் தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவரின் மனைவி, "கணவரின் உறவினர்களால் கொடுத்த தொல்லையால் அவர் மனதுடைந்து தற்கொலை செய்திருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
பாடகர் ரஞ்சித் சிந்துவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் உடலுக்கு ரசிகர்கள், உள்ளூர் மக்கள் வந்து தங்களின் அஞ்சலியை செலுத்தினர்.