திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புஷ்பா படத்தின் 2ம் பாகம்: கேரளா வெளியீடு உரிமைகளை கைப்பற்றிய ஈ4 என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம்..!
சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில் ரெட்டி, பகத் பாசில் உட்பட பலர் நடித்து உருவாகி வெளியான திரைப்படம் புஷ்பா. செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை மையமாக கொண்டு வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.
புஷ்பா 2 டீசர், பாடல் வெளியீடு:
இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து திரும்புமுனையுடன் நிறைவு செய்யப்பட்ட முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் தயாரிக்கப்பட்டு வந்ததது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. அதனைத்தொடர்ந்து, புஷ்பா புஷ்பா என்ற பாடலும் வெளியானது.
The God's own country is all set for the euphoria of Pushpa Raj ❤🔥#Pushpa2TheRule Keralam Release by @E4Emovies 💥💥
— E4 Entertainment (@E4Emovies) May 8, 2024
Grand release worldwide on 15th AUG 2024.
▶️ https://t.co/jlN1vrjBTy
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @SukumarWritings pic.twitter.com/CmK4qAhmLP
கேரளா வெளியீடு உரிமைகள்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகும் படத்தின் வெளியீடு உரிமைகளை பெறுவதற்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் மொழிவாரியாக போட்டியிடுகின்றன. இந்நிலையில், புஷ்பா திரைப்படத்தின் கேரளா வெளியீடு உரிமைகளை ஈ4 என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.