#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திரையரங்குகளை தெறிக்கவிடும் புஷ்பா ஓடிடி ரிலீஸ் எப்போ? வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு!!
நடிகர் அல்லு அர்ஜுனின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவான இப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் சமந்தா இந்த படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். புஷ்பா படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் உருவான இந்தப் படம் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனையை குவித்து வருகிறது.
300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அமேசான் ஓடிடியின் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது புஷ்பா படம் ஜனவரி 7ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.