மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல ஸ்டார் ஹோட்டலில் நடிகை ராஷ்மிகா செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா! வெளிப்படையாக அவரே போட்டுடைத்த ரகசியம்!
கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் ராஷ்மிகா தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் டுவிட்டர் லைவில் ரசிகர்களின் கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
அப்பொழுது அவர் தனது பள்ளி, சினிமா வாழ்க்கை மற்றும் மன அழுத்தம் ஏற்படும் போது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் அதில் ராஷ்மிகா கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்பொழுது அங்கிருந்த தலையணை உறை மிகவும் அழகாக இருந்தது. அதனால் அதை திருடி விட்டேன் என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் ஷாக்காகி அதை மட்டுமாஎங்களது மனதையும் திருடி விட்டீர்களே எனக் கூறி வருகின்றனர்.