#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய்யின் அடுத்த பிளான் என்ன? முன்னணி நடிகர் வெளியிட்ட ரகசியம்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தில் பெருகி வருகிறது. ஒரு சில வெற்றி படங்களை கொடுத்தாலே அரசியலுக்கு வந்து விடலாம் என்று பலர் எண்ணுகின்றனர்.
அந்த வரிசையில் விஜய்க்கும் ஆசை இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.
2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. இதனை தொடர்ந்து அவர் முழு நேர அரசியலில் எப்போது ஈடுபடப்போகிறார் என அனைவர்க்கும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ரஜினி மற்றும் கமல் அரசியலில் இறங்கியதை தொடர்ந்து விஜயின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் விஜய்யின் சர்க்கார் பட வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும் இந்த படம் அரசியல் பின்னணியை மையமாக கொண்ட திரைப்படம் என்று வெளியாகும் செய்திகளால் மேலும் எதிர்பார்ப்பு கூடுகிறது.
ஒரு பக்கம் சர்க்கார் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பேட்டிகள் வாயிலாக கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராதாரவி ஒரு பேட்டியில், நான் பார்த்த வரையில் விஜய் ரகசியமாக அரசியலில் நுழைய பிளான் செய்து வருகிறார் என்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், விஜய் அரசியலை கையாள நிறைய கற்றுக் கொண்டு வருகிறார் என்றும் கூறியுள்ளார்.