மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸில் இதுதான் நடக்குது.. இதை நம்பி ஏமாறாதீங்க.! இளம் பெண்களுக்கு நடிகை ராதிகா அட்வைஸ்!!
வேலூரில் நாராயணி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தின விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பங்கேற்று இளம்பெண்களுக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
வேலூர், அரியூரில் அமைந்துள்ள நாராயணி மருத்துவமனை சார்பாக உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் அண்மையில் நடைபெற்றுள்ளது. மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதிகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர் . அவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய நடிகை ராதிகா, தற்போது இளைஞர்களும், இளம்பெண்களும் செல்போனில் மூழ்கி விடுகிறார்கள். அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். யாரையும் நம்பி போனில் பேசி காதலில் மூழ்கி ஏமாறாதீர்கள்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில், ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதுதான் நடக்கிறது. பெண்கள் சுய நலமில்லாதவர்கள். அவர்கள் தங்களது உடல்நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். மாதம் ஒருமுறையாவது ரத்தம் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.