மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நயன்தாரா- விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகளை நேரில் சென்று பார்த்துள்ள பிரபல முன்னணி நடிகை.! என்ன கூறியுள்ளார் தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணமாகி நான்கு மாதத்திலேயே விக்னேஷ் சிவன், தானும் நயன்தாராவும் பெற்றோர்களாகிவிட்டதாக அறிவித்தனர். மேலும் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக குழந்தை பெற்றுக் கொண்டதாக சர்ச்சைகள் பரவியது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்கள் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா சரத்குமார் நேரில் சென்று பார்த்துள்ளார். அவர்களை சந்தித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த அவர், அற்புதமான பெண் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சந்தித்து டீ அருந்தியதாகவும், அவர்களின் அழகான குழந்தைகளையும் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு அதிக பலமும் சக்தியும் எனவும் வாழ்த்து கூறியுள்ளார்.