மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
" சந்திரமுகி படத்தில் இந்த விஷயத்தை செய்ய நான் மிகவும் பயந்தேன் " நடிகர் ராகவா லாரன்ஸ் மனம் திறந்த பேச்சு..
லைக்கா நிறுவனத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டுவிழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரணாவத், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் வெளியான 'மணிச்சித்திரத்தாழ்' படத்தின் ரீமேக் தான் சந்திரமுகி. இதன் முதல் பாகத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் சூப்பர் ஹிட்டானதையடுத்து, இதன் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்குத் தயாராகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், " நான் இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே தலைவரிடம் சென்று ஆசிபெற்றேன்.
தலைவர் செய்த வேட்டையன் கேரக்டரை நான் செய்யும்போது எனக்கு மிகுந்த பயமாக இருந்தது. என்னால் தலைவரைப் போல் சிறப்பாக செய்யமுடியுமா என்று. தற்போது இப்படம் தலைவரின் ஆசியுடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது" என்று ராகவா லாரன்ஸ் கூறினார்.