இன்றுமுதல் அந்த பழக்கத்தை நான் விட்டுவிட்டேன், பரபரப்பை கிளப்பி லாரன்ஸ் கூறியது எதை தெரியுமா ?



rahgava lawrence leave the habit of drinking wine

சிறந்த சமூக சேவகரான அன்னை தெரசாவின் 108வது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த சமூக சேவைக்கான விருது திரைப்பட நடிகர் ராகவா லாரன்சுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில்  டான்ஸ் மாஸ்டர் ஆக இருந்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர்  நடிகர் ராகவா லாரன்ஸ்.அவர் தற்போது மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் தம்மால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்து வருகிறார்.இதனால் அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு சமூக சேவைக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், ‘ இந்த உலகின் முதல் கடவுளாக நான் எனது தாயை நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு  நான் பிரெயின் டியூமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன்.

ragava lawrence

அப்போது என் தாய்தான் என்னை  நம்பிக்கையோடு காப்பாற்றினார். அவர் இல்லை என்றால் , நான் இல்லை என்று கூறினார். பிறகு இவ்விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என  தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் சிகரெட், மது என எந்த பழக்கமும் இல்லை. நடன இயக்குனரான பின் நண்பர்களின் வற்புறுத்தலால் எப்ப்போதாவது மது அருந்துவேன். இப்பொது அதுவும் இல்லை.

ஆனால் மிகவும் டென்ஷனா நேரத்தில் மட்டும் கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இனி இந்த விருதை பெற்றதற்கு மரியாதை கொடுக்கும் விதமாக ஒயின் அருந்தமாட்டேன் என கூறியுள்ளார்.