மழை பாதிப்பு.! தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய ரஜினி பவுண்டேஷன்.!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக, பெய்த கனமழையின் காரணமாக, வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதோடு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மேலும் பல்வேறு குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.
திருநெல்வேலி நகர் பகுதியில் மழை, வெள்ளம் காரணமாக ஒரு கான்கிரீட் வீடு ஒரு சில நிமிடங்களில் இடிந்து தரைமட்டமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் காரணமாக, தமிழக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி, மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வந்து நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
இதற்கு நடுவே சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது அது பற்றி சினிமா பரபரங்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று ஒரு விமர்சனம் எழுந்தது. இந்த சூழ்நிலையில் தான் மழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்தநாளன்று இதேபோன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை ரஜினிகாந்த் பவுண்டேஷன் சார்பாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.