மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிநாட்டில் நண்பர்களுடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிக்பாஸ் பிரபலம்.! வைரலாகும் புகைப்படம்.!?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சி 7 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் ரைசா வில்சன். மாடல் அழகியான ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
குறிப்பாக ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், ரைசா வில்சன் கதாநாயகியாக நடித்து வெளியான திரைப்படம் பியார் பிரேமா காதல். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. ஆனால் இப்படத்திற்கு பின்பு ரைசாவிற்கு பெரிதாக பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் கடந்த ஆண்டு மேக்கப் மூலமாக வந்த அலர்ஜியினால் இவரது முக தோற்றம் முழுவதுமாக மாறிவிட்டது. இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருந்தார். புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியுடன் இவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். தற்போது அலர்ஜி பிரச்சனை குணமடைந்து போட்டோ சூட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
பட வாய்ப்புகள் eதுவும் இல்லாததால் ரைசா வில்சன் படு கவர்ச்சியாக தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் வெளிநாட்டில் தன் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இந்த வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.