மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தாடி! இந்த இளம் நடிகருடன் டேட்டிங்கா? வெளிப்படையாக போட்டுடைத்த ரைசா! கடும் ஷாக்கில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மாடலான இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சி முடிவடைந்த கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார். மேலும் அதனைதொடர்ந்து ரைசா தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை ஆகிய இருபடங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் ரைசா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்யவுள்ளேன். தமிழகத்தின் மகிழ்ச்சிக்காக என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
I want to start dating @iamharishkalyan just to make TN happy ❤️ love for love ❤️
— Raiza Wilson (@raizawilson) December 8, 2019
அதன்பின்னர் ரைசா உண்மையாக நான் இதை இதற்கு முன் செய்ததில்லை. இதை எப்படி செய்வது என்று கூட எனக்குத் தெரியாது. ஒருவரை வெளியே அழைப்பது எப்படி என அப்பாவியாய் கேட்டுள்ளார்.
Honestly I have not done this before. I don’t even know how to do it . How to ask someone out ?
— Raiza Wilson (@raizawilson) December 8, 2019