திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தயவுசெய்து உதவுங்கள்! மிக உருக்கமாக செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர் வெளியிட்ட வீடியோ!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸ் சீனாவை அடுத்து இத்தாலியிலும், வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில், தற்போது 1600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய கொடிய வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான செந்தில் கணேஷ்- ராஜலக்ஷ்மி தம்பதியினர் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளனர்.
அதில் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கலையை மட்டுமே முழுவதும் நம்பியுள்ள கலைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கலைஞர்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தான் சீசன் இருக்கும். அப்போது தான் அவர்களுக்கு நிகழ்ச்சிகள் வரும். ஆனால், தற்போது ஊரடங்கு பிறப்பிக்க பட்ட நிலையில், பல நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பல கலைஞர்களும் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
மேலும் தற்போது நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் தாங்கள் வாங்கிய கடன்களை அடைப்பது, மளிகை சாமான் வாங்குவது, பால், அரிசி போன்ற அன்றாட தேவைகளுக்கே பெருமளவில் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனைவருக்கும் உதவிவரும் தமிழக அரசு, கலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் கலைஞர்களுக்கு, அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உதவிபுரியுமாறு வேண்டுகிறோம் என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.