திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜெயிலர் படத்தினால் பணக்காரராக மாறிய ரஜினிகாந்த்.! நெகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார்..
நெல்சன் திலீப் குமார் அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் "ஜெயிலர்". சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரையுலக வாழ்வில் அசாதாரண வெற்றியை அளித்துள்ளது இந்த திரைப்படம்.
மேலும் இப்படம் வசூலில் பல கோடிகளை எட்டியது. இந்த திரைப்படத்தை இயக்கிய திரு. கலாநிதி மாறன் அவர்கள் திரைப்படத்தின் வெற்றியால் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கும், அதில் பணியாற்றியவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு சொகுசு காரையும் அதில் பணியாற்றிய மற்றவர்களுக்கு தங்க காசுகளையும் வழங்கினார்.
சமீபத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் "ஜெயிலர்" பட சக்சஸ் மீட்டிங்கில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "தற்போது கூட நான் கலாநிதி மாறன் வழங்கிய காரில் தான் வந்தேன் என்றும், அந்த காரில் ஏறி அமர்ந்து இருந்தால் நான் பணக்காரனாக பீல் பண்ணுகிறேன் என்றும் மகிழ்ச்சிக்காக கூறினார்".
இவ்வார்த்தையை அவர் அவருடைய பாணியிலேயே கூறியது அரங்கில் இருந்த அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.