மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய அவதாரம்.! அப்போ.. ராஜாராணி தொடரிலிருந்து ரியா விலக இதுதான் காரணமா?? வெளிவந்த சூப்பர் தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜாராணி 2. இதில் ஹீரோவாக சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார். மற்றும் சந்தியா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக முதலில் நடிகை ஆலியா மானசாவே நடித்தார்.
ஆனால் அவர் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமான நிலையில் பாதியிலேயே ராஜாராணி தொடரிலிருந்து விலகினார். அவரை தொடர்ந்து ரியா விஸ்வநாதன் என்பவர் ராஜாராணி 2 சீரியலில் சந்தியா ரோலில் நடித்தார். இந்த நிலையில் கனவு நனவாகி சந்தியா ஐபிஎஸ் அதிகாரியாகி தொடர் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ரியா அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேலும் சீரியலை விட்டு தானாக விலகவில்லை. முன்னறிவிப்பின்றி தன்னை நீக்கிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த சீரியலுக்கு சண்டக்கோழி என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.