திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவரை இழந்து மீளாதுயரில் வாடும் நடிகை மீனா.! நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த்.!
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை மீனாவின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில் நுரையீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அவர் இதற்காக சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் தொற்று தீவிரமடைந்த நிலையில் வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
மேலும் அவருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் பொருத்தக்கூடிய நுரையீரல் கிடைப்பதற்கு தாமதமான நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். , நடிகை குஷ்பு, சரத்குமார், விஜயகுமார் குடும்பத்தினர், நடிகை ரம்பா ஆகியோர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.