ரஜினியின் அடுத்த படத்தின் பெயர் வெளியானது..! பெயரே செம மாஸா இருக்கே..! உற்சாகத்தில் ரசிகர்கள்.!



Rajini 168 movie named as annaaththa

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவரும் தலைவர் 168 படத்திற்கு அண்ணாத்த என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். விஸ்வாசம் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார்.

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. படத்தில் நயன்தாரா வழக்கறிஞராகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை குஷ்புவும் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்நிலையில் படத்திற்கு அண்ணாத்த என படக்குழு பெயர் வைத்து அதன் மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

Annaatha

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் - ரஜினி கூட்டணியில் உருவான பேட்ட திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தற்போது இந்த கூட்டணியில் மீண்டும் உருவாகும் அண்ணாத்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.