திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகர்களை ஏமாற்றிய ரஜினிகாந்த்.? கொந்தளிக்கும் ரசிகர்கள்..
தனது ஸ்டைலான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர் தான் ரஜினி. பல வருடங்களாக ஹிட் கொடுக்காமல் இருந்த ரஜினி, சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்த "ஜெயிலர்" திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்.
இதையடுத்து தற்போது ஜெய்பீம் பட இயக்குனர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில் உட்பட பலர் நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் சிலர் 'ரஜினி தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்' என்று ஒரு புது பிரச்சனையை கிளப்பியிருக்கின்றனர்.
அது என்னவென்றால், சென்னையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் 100 ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக மண்டபம் கட்டிய புதிதில் ரஜினி அறிவித்தார். ஆனால் இதுவரை ஒரு திருமணம் கூட இலவசமாக ரஜினி நடத்தவில்லை என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.