திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் ரஜினி ரசிகர்கள்.!
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை உலுக்கிய கனமழை, வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனங்கள், திரைப்பிரபலங்களின் ரசிகர்கள் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உணவு பொட்டலங்கள், குடிநீர், பால் பவுடர், பிஸ்கெட் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பாதிக்கபட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி , தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் நாளை காலை பத்து மணி அளவில் விநியோகம் செய்யப்படுகிறது.
முன்னதாக நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில், விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னை பெருவெள்ளத்தில் விஜயின் புகைப்படத்தை வைத்து நிவாரண பொருட்கள் வழங்கியது சர்ச்சையாகியது குறிப்பிடத்தக்கது.