திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. செம மாஸ்தான்.! மீண்டும் பிரமாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார்.! வெளிவந்த வேறலெவல் தகவல்!!
தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக, சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனத்தையே பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ரஜினியின் 170 வது படத்தை டான் படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 171வது படத்தை மகள் சௌந்தர்யா இயக்குவதாக கூறப்பட்ட நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தற்போது உலக நாயகன் கமலின் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வரும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அதனைத் தொடர்ந்து தலைவரின் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் 170 மற்றும் 171வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த தகவலால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.