மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யார் கண்ணு பட்டுச்சோ.. இப்படியாகிருச்சு!!வருந்திய ரஜினி! கண்கலங்கிய நடிகை மீனா!!
1982ஆம் ஆண்டு வெளிவந்த நெஞ்சங்கள் படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை மீனா. அதனை தொடர்ந்து அவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயே கேட்ட குரல் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
பின்னர் ஹீரோயினாக அவதாரம் எடுத்த அவர் பின் பல முன்னணி நடிகை நடிகர்களுடனும் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கண்ணழகியாக, இளைஞர்களின் கனவுநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில் திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்த நடிகை மீனாவை கௌரவிக்கும் வகையில் அண்மையில் மீனா 40 என்ற விழா நடைபெற்றுள்ளது.
அதில் ரஜினி, சரத்குமார், பாக்கியராஜ், கேஎஸ் ரவிக்குமார், சேரன், நாசர், ராதிகா, சங்கீதா, போனி கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு நடிகை மீனா குறித்த சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் மீனா குறித்து பல விஷயங்களை பேசிய நடிகர் ரஜினி, யார் கண்ணு பட்டுச்சோ இப்படி ஆகிருச்சு என மீனாவின் கணவர் மறைவு குறித்து பேசி கண்கலங்கியுள்ளார்.