மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளை ராமர் கோயில் திறப்பு விழா.. உற்சாகமாக புறப்பட்ட ரஜினிகாந்த்.!
உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் நாளை கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ராமர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்தி சென்றுள்ளார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 500 வருடங்களாக போராடி ராமர் கோயில் தற்போது தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மட்டுமில்லாமல் பல்வேறு துறை பிரபலங்கள் அயோத்திக்கு படையெடுத்து சென்றுள்ளனர்.