மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைவர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் குதூகலக் கொண்டாட்டம்.!
இந்திய சினிமா துறையை பொறுத்தவரையில், ரஜினிகாந்த் என்ற பெயருக்கு ஒரு தனி அடையாளம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இந்த பெயருக்கு தனி அடையாளம் மட்டுமல்ல இன்னும் பல தனித்துவங்கள் இருக்கிறது என்றும் சொல்லலாம். ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலின் மூலமாக ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் அவர்களுக்கு வயதாகிவிட்ட நிலையில், அவர் திரைத்துறையிலிருந்து இதோ ஓய்வு பெறுவார், அதோ ஓய்வு பெறுவார் என்று பலரும் நினைத்து வந்த நிலையில், 40 வருடங்களை கடந்தும் அவர் திரை துறையை விட்டு விலக வேண்டும் என நினைக்கவில்லை. அதோடு அவருடைய ரசிகர்களும் அவரை கைவிடவில்லை, ரசிகர்களை அவரும் கைவிடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
டிசம்பர் மாதம் 12-ஆம் தேதியான இன்று தலைவர் ரஜினிகாந்தின் பிறந்தநாள். அவர் இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தன்னுடைய மனைவி, மகள், மற்றும் பேரக்குழந்தைகள் என தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து கேக் வெட்டி அவர் தன்னுடைய பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடுகிறார். ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானதை தொடர்ந்து, அதை கண்ட ரசிகர்கள் அவரை வாழ்த்தியும், வணங்கியும் மகிழ்ந்து வருகிறார்கள்.