திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜெயிலர் வெற்றிக்கு காரணம் அனிருத் தான்.. நெல்சனை அவமானப்படுத்திய ரஜினிகாந்த்.?
நெல்சன் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில், ரஜினி நடித்து சமீபத்தில் வெளியானது 'ஜெயிலர்' திரைப்படம். தற்போது வரை 'ஜெயிலர்' திரைப்படம் 600கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிக்கு 100கோடிக்கான காசோலை மற்றும் ஒரு விலை உயர்ந்த காரைப் பரிசளித்தார். தொடர்ந்து நெல்சன் மற்றும் அனிருத்துக்கும் மிக ஆடம்பரமான கார்களை பரிசளித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் கலாநிதிமாறன் ஜெயிலர் படக்குழுவிற்கு ஆடம்பரமாக விருந்தளித்தார். அதில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, "ஆரம்பத்தில் ஜெயிலர் படம் சுமாராகத் தான் இருந்தது. தனது இசையால் அனிருத் 'ஜெயிலர்' படத்தை வெற்றி பெற வைத்துவிட்டார்.
எனக்கும், நெல்சனுக்கும் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, தனது இசையின் மூலம் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார் அனிருத்" என்று அனிருத்தைப் புகழ்ந்த ரஜினி, படத்தில் தொடர்புடைய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் பேச்சு இணையத்தில் வெளியாகி நெல்சனை அவமானபடுத்துகிறாரா ரஜினி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.