நடத்துநராக வேலை பார்த்த இடத்திற்கு சென்ற ரஜினிகாந்த்.. ரசிகர்கள் ஆச்சர்யம்.!



Rajinikandh went to his old working place

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நிஜ பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட். மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் மைசூரில் பிறந்தார். இவர் பெங்களூரில் பேருந்து நடத்துனராக தன் வாழ்க்கையை தொடங்கினார்.

rajini

இதன்பின்,1975ம் ஆண்டு ,கே பாலசந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். மூன்று முடிச்சு, காயத்ரி, 16 வயதினிலே போன்ற படங்களில் நெகடிவ் கேரக்டரில் நடித்துப் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து ரஜினிகாந்த், முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை தொடங்கி, தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் வரை இவரது படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

rajini

இந்நிலையில், பெங்களூருவில் தான் நடத்துனராக பணியாற்றிய ஜெயநகர் பேருந்து டிப்போவிற்கு திடீரெனெ சென்ற ரஜினி, அங்குள்ள ஊழியர்களோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து, தான் பணியாற்றிய போது நடந்த நிகழ்வுகளை அவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.