திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினி ரசிகரின் அருமையான சாதனை! மாற்றுத்திறனாளியான அவரை நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார்.!
பிறவியிலேயே கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி பிரகாஷ். சிறுவயது முதலே பிறருக்கு உதவுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவும் குணமுடையவனாக இருக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த வழி தான் இரத்த தானம். இதுவரை 100 முறைக்கு மேல் இரத்த தானம் செய்துள்ளார். 18 மாநிலங்களுக்கு மேல் பயணம் செய்து, இரத்த தானம், உடல் தானம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளார்.
இதற்காக அவருக்கு சாதனை சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. தீவிர ரஜினி ரசிகரான பிரகாஷ் அந்த சான்றிதழை தலைவர் ரஜினிகாந்தின் கையால் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூற அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ரஜினி மனம் நெகிழ்ந்து அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவரை நேரடியாக சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினியை சந்தித்த பிரகாஷ் அவரின் கையால் சாதனை சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
ரஜினியை சந்திப்பது பலரது கனவாக இருக்கும் வேளையில், மாற்றுத்திறனாளி ரசிகரை ரஜினி தேடிச் சந்தித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த தருணத்தை தன் வாழ்வில் மறக்க முடியாது என்று பிரகாஷ் பெருமைப்படுகிறார்.