அட அட.. தனது பிறந்தநாள் கேக்கிலேயே மெசேஜ் சொன்ன சூப்பர் ஸ்டார்! இணையத்தையே தெறிக்கவிடும் புகைப்படம்!



Rajinikanth birthday cake photo viral

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால், ஸ்டைலால் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை நேற்று  (12-12-2020) கொண்டாடினார்.நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையடுத்து அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அவருக்கு நேரில் வாழ்த்து சொல்ல போயஸ் கார்டன் இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் சமீபத்தில்  தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்  இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.

rajinikanth

அந்த இப்போ இல்லைனா எப்போ என்ற ஹேஷ்டாக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கினர். இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் அவரது பிறந்தநாளை வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த கேக் நவ் ஆர் நெவர் அதாவது இப்போ இல்லைனா எப்போ என்ற அர்த்தமுள்ள எழுத்து வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.