மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினிகாந்த் வீட்டையும் விட்டு வைக்காத வெள்ள நீர்.?
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக, ஒட்டுமொத்த சென்னையும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த புயல் காரணமாக, நடிகர் ரஜினிகாந்தின் வீடு இருக்கும் போயஸ் கார்டன் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.
இந்தப் புயல் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஆகவே பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு அதிகமானதால், இந்த பகுதிகளில் அதிக பாதிப்பு காணப்பட்டது. பல பகுதிகளில் முதல் மாடி வரையில் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால், அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாயினர்.
இந்த மழை காரணமாக, பல முக்கிய திரைப்பட நடிகை, நடிகர்களின் வீடுகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடும மழை, வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அவர் வீட்டிலில்லை. ஆனால் அவருடைய குடும்பத்தினர் தற்போது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்கள். என தகவல் கிடைத்திருக்கிறது.