திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினியின் முன்னாள் காதலி இந்த நடிகையா? வெளியான சுவாரஸ்ய தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் காதலி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவருக்கு 73 வயதான போதிலும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக இவருடைய மார்க்கெட் குறையாமல் உள்ளது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காதலி தொடர்பான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1981 ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் லதாவை சந்திப்பதற்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டுள்ளார். அவர் வேறு யாருமில்லை ரஜினிகாந்துடன் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி தான் என்று கூறப்படுகிறது.
அதன்படி, ஒருமுறை ஸ்ரீதேவியின் வீட்டு கிரகப்பிரவேசுக்கு சென்ற ரஜினி, அங்கு ஸ்ரீதேவியிடம் தனது காதலை கூறி அப்படியே பெண் கேட்கலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால் திடீரென ஸ்ரீதேவியின் வீட்டில் மின்வெட்டு ஏற்பட்டதால் தற்போது நேரம் சரியாக இல்லை என பெண் கேட்காமலேயே திரும்பியுள்ளார். இந்த விஷயத்தை இயக்குனர் பாலச்சந்தர் ஒரு பேட்டியில் கூறியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.