மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புனித் கடவுளின் குழந்தை.! கொட்டும் மழையில் நடந்த விருது விழா! உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்!!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 45 வயதில் நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மரணமடைந்தது ரசிகர்கள் மற்றும் திரையலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கலைப்பணி, சமூக சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கன்னட ராஜ்யோத்சவா தினமான இன்று மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தனது புனித் சார்பாக அவரது மனைவி அஸ்வினி விருதை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டு அவருக்கு விருதை வழங்கினர்.பின் நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் கன்னட ராஜ்யோத்சவா வாழ்த்துக்களை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புனித் ராஜ்குமார் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கானோர் கூடினர். அந்த கூட்டம் அவர் நடிகர் என்பதால் வந்தது கிடையாது. அவரது மனிதாபிமானம் மற்றும் ஆளுமைக்காக வந்த கூட்டம். புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த நாளில் மழை வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவனது அருள் இருக்கிறது என்பது தெரிகிறது. அவர் கடவுளின் பிள்ளை என கூறியுள்ளார்.