#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீரென கோவைக்கு பறந்த சூப்பர் ஸ்டார்.. ஓ இதான் விசேஷமா.?!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா கடந்த ஆண்டு இரண்டாவதாக ஆண் குழந்தை பெற்றுக் கொண்டார். சௌந்தர்யாவின் கணவரான விசாகனுக்கு சொந்த ஊர் கோவை மாவட்டம், சூலூர் ஆகும்.
எனவே, சௌந்தர்யாவின் குழந்தைக்கு காதணி விழா மற்றும் பெயர் சூட்டுதல் இன்று கோவையில் நடைபெறுகிறது. இதற்காக சூலூர் மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த ஏற்பாடுடன் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகனின் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கின்றனர்.
பேரனின் காதுகுத்து விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் இன்று விமானம் மூலமாக சென்னையில் இருந்து கோவைக்கு சென்றுள்ளார். அவர் வருவதை அறிந்த ரஜினி ரசிகர்கள் கோவை விமான நிலையத்தில் சூழ்ந்து கொண்டு அவருக்கு பலத்த வரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்து கார் மூலமாக காதணி விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் சூலூருக்கு புறப்பட்டு சென்றள்ளார்.