#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோலாகலமாக நடைபெற்ற ரஜினியின் மகளது திருமணம்!! யார் யார் வந்தார்கள் தெரியுமா??
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவருக்கும், தொழிலதிபர் அஷ்வினுக்கும் கடந்த 2010ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்து பிரிந்தார்.
இந்நிலையில் தற்போது சௌந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சமீபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் கடந்த 9-ந்தேதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. நேற்றும் திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடந்தன.
இந்நிலையில் சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கோலாகாலமாக நடைபெற்றது.
திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் மற்றும் மேலும் அமைச்சர்கள் பலரும் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்
மேலும் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், வைரமுத்து, அனிருத், இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ் நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.