#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா?
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் எந்திரன். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எந்திரன்தான். படம் மாயப்புறும் வெற்றபெற்றதை தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தை மிஞ்சி மேலும் அதிக பொருள் செலவில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். மாபெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வரும் 29 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. படம் முழுவதும் 3D தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் 2.0 திரைப்படம் வரும் 29-ம் தேதி வெளியாகிறது. அதுவும் உலகம் முழுக்க 10000 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம் 2.0 திரைப்படம் அதோடு மலேசியாவின் ஒரு பேருந்தில் 2.0 படத்தை புரோமோட் செய்யும் வகையில், நவீன பேருந்து ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்தின் உரிமையாளர் தீவிர ரஜினி ரசிகராம்.