மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. வெற்றி விருதுடன் பிக்பாஸ் ராஜு யாரை சந்தித்துள்ளார் பார்த்தீங்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கடந்த வாரத்துடன் முடிவடைந்தது.
உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அவர்களில் பாவனி, நிரூப், அமீர், ராஜு, பிரியங்கா ஆகியோர் மட்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் ராஜு வெற்றியாளர் ஆனார். இந்த நிலையில் டைட்டில் வின்னர் ராஜுவிற்கு பலரும் வாழ்த்துக் கூறினர்.
இந்த நிலையில் குருநாதரான பாக்யராஜை சந்தித்து பிக்பாஸ் ட்ரோஃபியை காட்டியுள்ளார். ராஜு சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப கால கட்டத்தில் இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் தனது நண்பரான பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.