மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராமாயணம் படத்தில் நடிக்க மறுத்த நடிகர் மகேஷ்பாபு! அதுவும் எப்படியொரு கதாபாத்திரத்தில் பார்த்தீர்களா!!
சினிமா துறையில் புராணக்கதைகளை மையமாக கொண்டு படங்கள் உருவாக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஆதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதையை மையமாக கொண்டு படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ராவணனாக சயீப் அலிகான் நடிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மற்றுமொரு இராமாயணம் படம் உருவாகி வருகிறது. தங்கல் படத்தை இயக்கிய நித்தீஷ் திவாரி இந்த படத்தை 3 டி தொழில் நுட்பத்தில் இயக்குகிறார். இதில் ராமராக நடிக்க நடிகர் மகேஷ்பாபுவிடம் கேட்கப்பட்டிருந்தது.
மேலும் அதன் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது அப்படத்தில் ராமராக நடிக்க மகேஷ்பாபு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து மகேஷ்பாவுக்கு பதிலாக ராமராக நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.