திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நீலாம்பரியா நடிச்சதே தப்புனு தோணுச்சு.!" ரம்யா கிருஷ்ணனின் சுவாரஸ்ய பேட்டி.!
ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு திறமை :
கோலிவுட்டில் குணச்சித்திர நடிகையாக நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தனக்கு வழங்கப்படும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது திறமையால் ரசிகர்களை கவருபவர். பாகுபலி சிவகாமி தேவியாக கெத்தாக நடித்த அவர் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தால் கூட அதற்கு ஏற்றார் போல பின்னி பெடல் எடுக்க கூடியவர்.
படையப்பா பட அனுபவம் :
சமீபத்திய பேட்டி ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் பேசிய போது, தனது படையப்பா பட அனுபவம் பற்றி பேசினார். அதில், "நீலாம்பரி யாக ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்று எனக்கு மிகவும் யோசனையாக இருந்தது. படப்பிடிப்பு நடந்த போது கூட இந்த படத்தில் எதற்கு கமிட் ஆனோம். என்று யோசித்துக் கொண்டே தான் நடித்தேன்.
இதையும் படிங்க: ரஜினி பட நடிகையுடன் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இரகசிய தொடர்பா.?! விவகாரம் விவாகரத்து வரை சென்றதாக கிசுகிசு.!
வாய்ப்புகள் அதிகரிப்பு :
ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பின்னர் எனது எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது. அதற்கு முன் நான் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட படையப்பா படத்தில் நீலாம்பறியாக நடித்த பின்னர் தான் எனக்கு அதிக வரவேற்பும் வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தது." என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: "என்னுடைய நாளை அழகாக்கிய தோழி" - ரம்யா கிருஷ்ணனை புகழ்ந்து பதிவிட்டுள்ள ரோஜா.!