திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராஜமாதா எடுத்த அதிரடியான அசத்தல் முடிவு !! செம குஷியான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். 90 இல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த இவர் தற்போது பல்வேறு மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏகப்பட்ட படங்கள் இவரது கையில் உள்ளது.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் ராஜ மாதாவாக இவர் நடித்த கதாபாத்திரம் இந்திய அளவில் வரவேற்பை பெற்றது. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் 2003ஆம் ஆண்டு கிருஷ்ணா வம்சி என்ற தெலுங்கு இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் சின்னத்திரை, வெள்ளித்திரை என பிரபலமாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது அவரது கணவர் கிருஷ்ணா வம்சியின் இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இத்தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.