திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காருக்குள் இருந்த நடிகை ரம்யாகிருஷ்ணன்..! காரிலிருந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பறிமுதல்..!
நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமான கார் மூலம் மதுபாட்டில்கள் கடத்திவந்த நிலையில் கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.
சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இன்னோவா சொகுசு கார் ஒன்றை போலீசார் நிறுத்தியநிலையில் காரின் உள்ளே பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது தங்கை அபிநயா கிருஷ்ணன் ஆகியோர் இருந்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் வாகனத்தை சோதனையிடவேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து போலீசார் காரை சோதனை செய்ததில் காரின் உள்ளே ஏராளமான மதுபாட்டில கடத்திவரப்பட்டதை கண்டறிந்தனர். இது தொடர்பாக காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து சில மணிநேரங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் அவரது சகோதரியும் கார் ஓட்டுனரை ஜாமினில் அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.