திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ரோஜா ஆபாச நடிகையா.. பிரதமர் தான் பதில் சொல்லணும்" நடிகை ரம்யா கிருஷ்ணன் காட்டம்.?
1992ம் ஆண்டு "செம்பருத்தி" திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரோஜா. ரஜினி, சரத்குமார், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ரோஜா தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார் ரோஜா. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு குறித்து சமீபத்தில் ரோஜா விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்யநாராயண மூர்த்தி ரோஜாவை விமர்சித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, " ரோஜா ஆபாச படங்களில் நடித்திருப்பதாகவும், அந்த வீடியோ தன்னிடம் உள்ளதாகவும், சந்திரபாபு நாயுடுவை விமர்சிப்பதை ரோஜா நிறுத்தாவிட்டால், அந்த வீடியோவை தான் வெளியிடுவேன்" என்றும் ரோஜாவை மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரோஜா கதறி அழுதார். தொடர்ந்து ரோஜாவுக்கு ஆதரவளித்து ராதிகா, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் "ஒரு பெண் அமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை" இதற்கு பிரதமர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரத் மாதா கி ஜே என்று சொல்லும் நாட்டில் பெண்ணை அவமானப்படுத்துவது சரியா என்று கொந்தளித்து வருகின்றனர்.