மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ.. என்னாச்சு! நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை! ஷாக் தகவலால் கவலையில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இப்படங்கள் மூலம் அவர் பெருமளவில் பிரபலமடையவில்லை. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் புடவையில் இடுப்பு தெரிய நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமானார்
அதைத்தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. மேலும் ரம்யா பாண்டியனுக்கு சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரி திவ்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் இருநாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்றும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ரம்யா பாண்டியன் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப பிரார்த்தித்துள்ளனர்.